மன்னவரும் வீடுவந்து மனைவி அழுவகண்டு
என்னடி உடம்புக்கென்ன புருஷன் கேட்கும்போது
என்னங்க மன்னவரே சொல்ல மனசு வல்ல
உடம்புக்கு ஒண்ணுமில்ல உள்ளவாங்க சொல்லிடுவேன்
சந்தைக்கு நீங்க போனவுடன் தனியா படுத்திருந்தேன்
சண்டாள உன்தகப்பன் வந்து தண்ணி கேட்டாருங்க
மாமனார் என்று எண்ணி தண்ணி கொடுத்தேனுங்க
தண்ணி குடித்து விட்டுத் தாவி என்னை இழுத்தாருங்க
காலபிடித்து நானும் கையெடுத்துக் கும்பிட்டேன்
தாருமாறா இழுத்தாருங்க ஜாக்கிட்லாம் கீஞ்சிதுங்க
மாமியார் சண்டையால மதிப்புப்போச்சி வீதியிலே
மாமனார் கொடுமையால மானம்போகும் சொல்லாதிங்க
இனிமேல் நானிருந்து இந்த வீட்டில் வாழமாட்டேன்
தாய்வீடு போவோம் வாங்க சந்தோஷமாய் வாழ்ந்திடலாம்
பொண்டாட்டி சொல்லகேட்டுப் புருஷனும் மனசுகெட்டு
மனைவிய இட்டுக்கொண்டு மாமிவீடு வந்தானுங்க
சாப்பிட்டு சந்தோஷமா மனைவிய தூங்கவச்சிட்டு
அப்பா செய்த கொடுமைய அறிய வேணுமென்று
இரவு எட்டுமணிக்கெல்லாம் கொட்டாயிக்கு வந்தவுடன்
கொட்டாயிக்குள்ள அப்பா அம்மா கொடுமைய பேசுராங்க
என்னாடி நாவம்மா மருமகள் வீட்டுக் போனேன்
மகனும்மே வீட்டில் இல்ல மருமகள் இருந்தாளடி
தந்திரம்மா மருமகள தண்ணி கேட்டேனடி
மருமக தண்ணிமொண்டு மதிப்பாக தந்தாளடி
தண்ணிய குடிச்சிவிட்டுக் கதவ சாத்திமூடி
மருமகள பிடித்து நானும் மானபங்கம் செய்துவந்தேன்
அப்பா அம்மாவிடம் சொல்லிக்கொண்டு ஆனந்தமா சிரிக்கும்போது
பொண்டாட்டி சொன்னதெல்லாம் பொய்இல்ல உண்மை என்று
சதிகார தாய்தந்தைய மடிக்கவ வேணுமென்று
வத்திகுச்சி கீச்சி கீச்சி கொட்டாசுத்தி கொள்ளிவச்சான்
கொட்டாமுழுவதும் அனல்பத்த அப்பாஅம்மா கத்த கத்த
நோட்டுபேனா எடுத்து விபரமெல்லாம் எழுதுரானே!
அய்யா !பெரியோரே! அதிகாரம் பெற்றவரே!
உண்மையான சேதியெல்லாம் உங்களுக்கு எழுதிவச்சேன்
அப்பா வந்து மருமகள அவமானம் செய்தார் என்று
மனைவி செல்லகேட்டு கொட்டாயிக்குப் போனேனங்க
கொட்டாகுள்ள அப்பாஅம்மா பேச்சகேட்டு
மனசுகெட்டு தாய்தந்தைய மடிச்சிவிட்டேன் நெருப்புவச்சி
அப்பாஅம்மா கொடுமையால அவமானமும் மதிப்பும்போச்சி
மனைவியால குத்தமில்ல மாமியிடம் சொல்லிடுங்க
தாய்தந்தை மடிச்சிவிட்டு நானிருந்து வாழனும்மா?
தூக்குமாட்டி மடிய போரேன் மனைவிய காத்திடுங்கோ!
கொட்டாயில நெருப்புவச்சி தாய்தந்தைய மடிச்சிவிட்டு
பெத்தமகனும் தூக்குமாட்டி மடியவே
இரவு விடியவே ஜனங்களும் கண்டு பார்த்தாங்கண்ணா
அதிகாரியும் ஜனங்களும் வந்து அநியாயகொலை
எழுதிவச்ச சீட்டபடித்துப் பார்த்தாங்கோ
அண்ணம்மாளிடம் வாக்குமூலம் கேட்டாங்கோ?
அண்ணம்மா அழுதுகொண்டு நடந்தது உண்மை என்று
கணவரும் செத்தார் என்று அண்ணலே!
கத்தும்போது ஆவிபோச்சி தன்னாலே!
பொண்ணபெத்த தாயவளும் புரண்டு அழுகும்போது
அளவில்லா கூட்டம் வந்து பார்த்தாங்கோ!
அதிகாரியும் அழுது கண்ணீர் விட்டாங்கோ!
யாரால தப்பு என்று அதிகாரிகள் கேட்கும்போது
ஊருஜனம் ஒத்துமையா வாழ்ந்தாங்கோ
மாமன்மாமி கோளார் என்று சொன்னாங்க
வந்ததொரு அதிகாரியும் வாக்குமூலம்கேட்டு
செத்தபிணங்கள தகனம் செய்யசொன்னாங்க
ஆறுமில்லா கேசு என்று போனாங்கோ
ஊத்தமரே குடும்பத்தில ஒத்துமையா வாழ்ந்திடுங்க!
பொறுமை இருந்தால் பெருமை வரும் முன்னால
பொறுத்து வாழ்ந்தால் குடும்பம் வளரும் தன்னாலே.
4 comments:
தங்களைப் பற்றிய வலைச்சரப்பதிவைக் காண..
http://gunathamizh.blogspot.com/p/blog-page_02.html
இவ்விணைப்பில் இலக்கியத்தமிழ் என்னும தலைப்பைச் சொடுக்கிச் செல்லுங்க முனைவரே..
அன்பின் முனைவரே..
இப்போதான் தங்கள் கருத்துரையை தமிழ்மணத்தில் கண்டு தங்கள் வலைப்பக்கம் வந்தேன்..
தொடர்ந்து பல பதிவுகளையும் படித்து பலருக்கும் கருத்துரையிடுங்கள் அதன்வழி தங்கள் பதிவைப் பலரும் கண்டு வருவார்கள்..
என்றும் அன்புடன்..
நலமா முனைவரே
மிகவும் நன்றாகவுள்ளது
தமிழ்க்காற்றைச் சுவாசிக்க..
http://thamizhkkaatru.blogspot.com/
இந்த இணைப்பில் வாங்க முனைவரே.
Post a Comment