Tuesday, August 9, 2011

மண்ணாங்கட்டிக் கொலைச்சிந்து -1


ஐங்கரனே வேலவனே விஷ்ணுபிர்மா ருத்தரனே
சரஸ்வதி லஷ்மிய சக்தி நவகிரங்களே
தேவர்களே வாரும் துரைசாமி வினைய தீரும்!

மண்டலத்தில வேனகொலை கண்டுருப்பீர் நேயர்களே!
மாமனார் மாமியார் கொடுமையால குடும்பங்கெட்டு
மடிந்த கொலைப்பாட்டு மனம் பதருதண்ணா கேட்டு
வெங்கனூர் கிராமத்தில ரங்கசாமி நாவம்மாளும்
பெத்ததொரு ஆண்பிள்ளைக்கு மண்ணாங்கட்டி பேரு வச்சி
வளர்த்து வரும்போது வயது பதினாரு

சிறுவயதில் மைந்தனக்கு திருமணம் செய்வோம் என்று
தென்னண்ட வீதியில சின்னியம்மா பெத்ததொரு
அன்னம்மாளாம் பேரு திருமணம் செய்தாரு
மாமனார் மாமியார் மகனும் மருமகளும்
நாலுபேரும் ஒத்துமையா குடும்பம் நடத்திக்கொண்டு
சந்தோசமா இருக்க சதிமோசம் வந்தது குறுக்கே

மருமகள் வந்தநாளா காட்டுவேலை வீட்டுவேலை
உட்கார நேரமில்லை உடம்பு வலிக்குதென்று
மருமகளும் படுக்க மாமியார் காலால் உதச்சி எழுப்ப
என்னடி மருமகளே! எழுப்ப எழுப்ப துக்கம் என்னா
மண்ணுதூக்கபோடி என்று மாமியார் துடப்பத்தால்
மாரி மாரி அடிக்க புரண்டு மருமகளும் துடிக்க
என்னாங்க மாமியத்த நான் எட்டுமாத கெற்பவதி
மண்ணு தூக்கமாளவில்லை போங்க- போங்க
அடிச்சி என்னை உதைக்காதிங்க நீங்க நீங்க
என்னடி மருமகள எந்த வேலையும் செய்யாதடி
ஆக்கி ஆக்கி கொட்டி வைப்பேன் வாடி வாடி
திண்ணுவிட்டு படுத்துத்தூங்கு போடி போடி

ஒரகார மாமியத்த ஒருத்தி வவுத்துக்காக
ஆக்கி எனக்கு போட வேணாம் போங்க போங்க
சோறுவேணாம் சாப்பிடுங்க நீங்க நீங்க
சோறுதண்ணி வேணாமென்று மருமகளும் தூங்க
மாமியாரும் மொறத்தெடுத்து அடிக்க அடிக்க
அங்கெருந்தெ ஜனங்களும் ஓடி மறிக்க மறிக்க

மாமியார் அடித்தெவுடன மருமகள் அழுதுகொண்டு
தாய்வீடு போனவுடன் அண்ணே அண்ணே
சண்டை நடக்குதங்க சொன்னேன் சொன்னேன்
சம்மந்தி சம்மந்திக்கும் சண்டை நடக்கும்போது
ஜனங்கள் வந்து சண்டையை நிறுத்தி அய்யா அய்யா
சங்கதிய கேட்குறாங்க மெய்யா மெய்யா

குருக்கவந்த பஞ்சாயத்தார் மறித்தும் அடங்கவில்லை
குடும்பத்த ரெண்டா பிரித்தார் பாரு பாரு
கோளாறு அமந்துபோச்சி வேரு வேரு
மாமனார் மாமியார் சொல்லு வேறு ஆச்சி
கொல்லகொட்டாயிக்கும் குடும்பம் ஆச்சி
மகனும் மருமகள் சோறு வேறு ஆச்சி
புருஷனும் மனைவியும் ஒன்னாபோச்சி


மாமியார் மருமகள் ஒத்தும இல்லாம
மாராட்டம் வந்தெது குடும்பத்துக்கு
காட்டுலரெண்டுபேர் வுருலரெண்டுபேர்
குடும்பம் பிரிந்தெது நேயர்களே!
அன்னம்மாளும்பாரு புருஷனோடு கூடி
ஆச்சாரமாகவ குடும்பம் பண்ண
ஒருநாளு புருஷனும் ஆடுபுடிக்கவே
சந்தைக்கு போனதும் மனைவியாளும்

வீட்டபெருக்கி பாயைப்போட்டு அண்ணே
படுத்தும்தூங்கவே வீட்டுக்குள்ள
மாமனார் வந்து மருமகளைக் கண்டு
மானத்தகெடுக்கவே எண்ணங்கொண்டு
மகனும் இல்லை என்று வீட்டுக்குள்ள வந்து
மருமகளைத் தண்ணி கேட்கும்போது
மாமனாரக் கண்டு மருமகளும் ஓடி
மதிப்பாக தண்ணியும் கொடுத்தாளன்னா

மருமகளும் தண்ணிகொண்டு கொடுக்க
மாமனாரும் கையபிடித்து இழுக்க
என்னாங்க மாமனார சின்னதனம் பண்ணுரிங்க
விடுங்க மதிப்பு கெடுங்க
மருமகள உந்தன் மீது ஏக்கம்
இரவுபகல் வரவில்ல தூக்கம்
மாமனார் மோகம்கொண்டு மாராப்பு துணியபிடித்து
இழுக்க மருமகள் துடிக்க

மானம்யீனம் கெட்டவரே பாவி
மருமகளை இழுக்கெலாமா துரோகி
கையெடுத்துகும்பிடுகிறேன் கதவை திறந்துமுன்ன
போங்க வெளியே நீங்க
கத்தாதோடி மருமகளே! என்று
கட்டிப்பிடித்து இழுக்கும்போது மண்டு
மருமகளும் கீழேவீந்து மண்டையில அடியும்பட்டு
அழுவ ரத்தம் ஒழுவ

மண்டையில ரத்தம் வரக்கண்டு
மாமனாரும் அலண்டு ஓட்டம் ஓட
மங்கையாளும் அழுதுருக்க மன்னவரும் வீடுவந்தார்
அண்ணே கேளும் பின்னே












6 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள பகிர்வு முனைவரே.

தொடர்ந்து பதிவிடுங்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

நீங்களே எழுதியதா முனைவரே..

முனைவர் இரத்தின.புகழேந்தி said...

கொலைச்சிந்துகள் மறைந்து வரும் வேளையில் அதனை சேகரித்து வெளியிட்டுள்ள தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள் . தொடர்க

அ.சின்னதுரை said...

இல்லை.இதுவும் நாட்டுப்புறப்பாடல்களில் ஒரு வகைதான்.கிராமத்தில் சேகரித்த பாடல் தான்.நன்றி முனைவர்.இரா.குணசீலன் அவர்களே.

அ.சின்னதுரை said...

தங்களின் வாழ்த்துக்கு நன்றி.முனைவர் இரத்தின.புகழேந்தி அவர்களே.

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பின் முனைவரே
வேர்களைத்தேடி வந்த தங்களுக்கு

இலக்கியத் தேனீ

என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்.

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html

இந்த முகவரிக்கு வந்து பெற்றுக் கொள்ளுங்கள்.

Post a Comment