Friday, November 19, 2010

என்னவென்று சொல்வாய்?

அழுகையுடன் பிறந்தாய்...
இனி அழாமல் இருக்கவா?
உயிருடன் இருப்பதை
ஊருக்குஉணர்த்தவா?
இல்லை
இது அழுகையின் தொடக்கம்
என அறிவிக்கவா?


இது  தேவைகளை
வெளிப்படுத்தும் கருவியா?
இல்லை
அம்மாவை அழைக்கும்
செயல் மொழியா?
   
 உள்ளிருக்கும் வரை
அம்மா கத்துவாள்
வெளிவந்தவுடன் நான்
கத்துவேன் என
நீங்கள் செய்துகொண்ட
தொகுதிப் பங்கீடா?


அம்மாவின்
முதல் குழந்தை
அப்பாவை இல்லை
என நீ செய்யும் போராட்ட ஒலியா?
இல்லை
எந்தக் குறையும் இல்லை
எனத் தெரியப்படுத்தும்
மங்கல ஒலியா?
 

என்னவென்று சொல்வாய்
என் செல்லக் குழந்தையே!
 

5 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

மழலையின் மொழிகள் புரிந்துவிட்டால் வாழ்க்கையின் பொருள் முழுவதும் புரிந்துவிடும்

RSL said...

na rasithavaikalil ethuvum onru

அ.சின்னதுரை said...

நன்றி இரா.குணா மற்றும் RSL அவர்களுக்கு

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பின் முனைவரே..

தமிழுலகம் பயன்பெறத் தொடர்ந்து பல ஆக்கங்கள் தந்து
தங்கள் இருத்தலை அடையாளப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

மதன்மணி said...

'மதன்மணி பேசுகிறேன்
நலமா முனைவரே
அருமையாக உள்ளது

Post a Comment